ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் இரண்டாவது நாளாக நடைபெற்ற சோதனை
இரண்டாவது நாளாக ஊராட்சிமன்ற தலைவர் வீட்டில் சோதனை ஈடுபட்டுவரும் அதிகாரிகள்
புதுக்கோட்டை மாவட்டம் பாச்சிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் பன்னீர்செல்வம்.இவர் மீது இதுவரையில் 22 மோசடி வழக்குகள் உள்ள நிலையில் தனக்கு 100 கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக 2.85 கோடி ரூபாயை முன்பணமாக பெற்றுக்கொண்டு
பன்னீர்செல்வம் தன்னை ஏமாற்றி விட்டதாக கோயம்புத்தூரைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை உரிமையாளர் மாதேஸ்வரன் கோவை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றப் பிரிவு உதவி ஆணையர் பார்த்திபன் தலைமையிலான 5 தனிப்படை போலீசார் நேற்று முதல் ஆலங்குடியில் உள்ள பன்னீர்செல்வத்தின் வீடு உள்ளிட்ட எட்டு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இரண்டாவது நாளாக இன்று நடைபெற்ற சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பன்னீர்செல்வத்தின் அலுவலகத்திற்கு சீல் வைத்துள்ள போலீசார் அவரை பிடிக்க 4 தனிப்படை அமைத்துள்ளனர்.
கடந்த இரு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் பன்னீர் செல்வத்தின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட உள்ளதாகவும் பன்னீர்செல்வம் பலரையும் ஏமாற்ற திட்டமிட்டு இருந்திருப்பது தெரிய வந்து இருப்பதாகவும் கோவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu