ஊராட்சி மன்றத் தலைவர் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலிசார் சோதனை

ஊராட்சி மன்றத் தலைவர் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலிசார் சோதனை
X

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில்

கோவை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில்

கோவை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சோதனையில்  ஈடுபட்டு வருகின்றனர்

ஆலங்குடி அருகே ஊராட்சி மன்றத் தலைவர் 2.85 கோடி மோசடி செய்ததாக கூறி கோவை மத்திய குற்றப்பிரிவு போலிசார் சோதனையில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாச்சிக்கோட்டை ஊராட்சிமன்ற தலைவர் பன்னீர்செல்வம் உள்ளார். இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் பல்நோக்கு மருத்துவமனை உரிமையாளர் மாதேஸ்வரன் என்பவரிடம் 100 கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாகக் கூறி 2.85 கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கைத் தொடர்ந்து, கோவை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை உதவி ஆணையர் தலைமையிலான சிறப்பு படை போலிசார் ஆலங்குடியில் உள்ள அவரது வீடு, இரண்டு பெட்ரோல் பங்க், அலுவலகம் என 6 இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சில மணி நேரங்களாக நடைபெற்றும் வரும் சோதனை நாளை வரை தொடரக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் கோவை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சோதனையில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்