ஆரவாரமின்றி வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்

ஆரவாரமின்றி வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்
X

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மைய வேட்பாளர் வைரவன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கு மக்கள் நீதி மையம் கட்சி கூட்டணி வேட்பாளராக வைரவன் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலங்குடி வடகாடு முக்கம் பகுதியில் இருந்து பேரணியாகச் சென்று தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் அக்பர் அலியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். பேரணியின் போது தனது சின்னமான டார்ச் லைட்டை கையில் ஏந்தியபடி கோஷங்கள் ஏதுமின்றி நாகரிகமான முறையில் பேரணியாகச் சென்ற சம்பவம் பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!