பொதுமக்கள் சாலைமறியல்- போக்குவரத்து பாதிப்பு

பொதுமக்கள் சாலைமறியல்- போக்குவரத்து பாதிப்பு
X

ஆலங்குடி அருகே குடிநீர் வசதி கேட்டு அப்பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பல்லவராயன்பத்தை ஊராட்சிக்குட்பட்ட ஆத்தியடிபட்டி கிராமத்தில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய அலுவலரிடம் அக்கிராம மக்கள் கோரிக்கை மனு கொடுத்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த அக்கிராம மக்கள் இன்று புதுப்பட்டி எனுமிடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் புதுக்கோட்டை கறம்பக்குடி சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த ஆலங்குடி டிஎஸ்பி முத்துராஜா தலைமையிலான போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களோடு பேச்சுவார்த்தை நடத்தி இன்னும் இரு தினங்களுக்குள் அக்கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர்.இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!