நம்ம ஊரு ஹீரோ.. மரம் தங்க கண்ணன்

மரம் தங்க கண்ணன்
ஆலங்குடி தொகுதி
மரங்களை சுவாசித்தவர், தன் சுவாச காலம் முழுவதும் மரங்களை நேசித்தவர் மரம் தங்கசாமி. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், சேந்தன்குடி கிராமத்தில் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்த மரம் தங்கசாமி வறட்சியின் பிடியில் இம்மண்ணும், வறுமையின் பிடியில் மக்களும் இருந்தபோது, விவசாயிகளின் வறுமைக்கு முழு காரணம் இயற்கையையும், மண்ணையும் காக்காமல் விட்டதே என்பதை உணர்ந்திருந்தார்.
வறட்சிக்கும், வறுமைக்கும் தீர்வு மரங்கள் மட்டுமே என்பதை உணர்ந்து, மரங்களை நட்டு வறுமையில் வாடிய விவசாயிகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியவர். இதன்மூலம் தமிழகத்தின் பசுமை பரப்பையும் அதிகரித்தவர். இயற்கையை நேசிக்கும் பண்பால் அவரது கிராமத்தை நோக்கி உலகம் முழுவதும் உள்ள சுற்றுச்சுழல் ஆர்வலர்களை பயணிக்க செய்தவர்.மரங்களை நேசித்து, மரங்களின் உணர்வுகளிலேயே வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தவர்.
தமிழகத்தின் வறட்சி பகுதிகளிலும் மரங்களை துளிர்க்கச் செய்தவர் தன் வாழ்நாள் முழுவதும் மரங்களுக்காகவே வாழ்ந்தவர் கடந்த 2018 செப்டம்பர் 16 ஆம் தேதி அன்று அவரது உடலையும் ஒரு மரத்திற்கு உரமாக்கி விட்டு மறைந்து விட்டார்.அவர் விட்டு சென்ற பணியை தொடர்ந்து அவரது மகன் மரம் தங்ககண்ணன் செயல்படுத்தி வருகிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu