புதுக்கோட்டையில் போதை மாத்திரை மற்றும் ஊசி வைத்திருந்த 5 பேர் கைது

புதுக்கோட்டையில் போதை மாத்திரை மற்றும் ஊசி வைத்திருந்த 5 பேர் கைது
X

புதுக்கோட்டையில் போதை மாத்திரை விற்பனையாளர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட, போதை ஊசிகள், மாத்திரைகள்.

புதுக்கோட்டை நகரில் போதை மாத்திரை மற்றும் ஊசி விற்பனை செய்வதற்கு பதுக்கி வைத்திருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சமீபகாலமாக போதை மருந்து மற்றும் போதை ஊசி பழக்கம் அதிகரித்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபனுக்கு தகவல் வந்தது.

அதன் அடிப்படையில் புதுக்கோட்டை நகர காவல் ஆய்வாளர் குருநாதன் தலைமையில் காவல்துறையினர் நகர பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுக்கோட்டை சந்தைப்பேட்டை அருகே சந்தேகத்துக்கிடமான முறையில் ஐந்து பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்ததில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

மேலும் அவர்களை சோதனை செய்ததில் அவர்கள் கையில் போதை மாத்திரை மற்றும் போதை ஊசிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது

இதனைத்தொடர்ந்து ராஜா. கார்த்திக் ராஜ், குமார், பாண்டியன், மற்றும் தினேஷ் குமார் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 90 போதை மாத்திரைகள் மற்றும் 15 போதை ஊசிகள் கைப்பற்றினர்.

பின்னர் ஐந்து பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புதுக்கோட்டை மாவட்ட கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதேபோன்று கடந்த 6 மாதத்திற்கு முன்பு போதை மாத்திரை மற்றும் போதை ஊரி விற்றதாக 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்து அவர்கள் 6 பேரும் சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்