தங்கத்திற்கு பெண்களிடம் மவுசு அதிகம் : அதேபோன்று தமிழக முதல்வருக்கு பெண்கள் மத்தியில் மவுசு

தங்கத்திற்கு பெண்களிடம் மவுசு அதிகம் : அதேபோன்று தமிழக முதல்வருக்கு பெண்கள் மத்தியில் மவுசு
X

தங்கத்திற்கு பெண்களிடம் மவுசு அதிகம் அதேபோன்று தமிழக முதல்வருக்கு பெண்கள் மத்தியில் மவுசு அதிகம். பெண்களால்தான் திமுக ஆட்சிக்கு வந்தது சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேச்சு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பிலான திருமண உதவித் திட்டம் மற்றும் தாலிக்கு தங்கம் ஆகியவற்றை 650 -க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பெண்களுக்கான திருமண உதவித் திட்டத்தை மறைந்த தமிழக முதல்வர் கலைஞர் தான் முதன் முதலாக கொண்டு வந்தார்.பொதுவாக தங்கத்திற்கு பெண்களிடம் மவுசு அதிகம். அதே ஒன்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பெண்கள் மத்தியில் மவுசு அதிகம்.பெண்களால்தான் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது என்றார்.

நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் டாக்டர் முத்து ராஜா, சின்னதுரை, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story
ai solutions for small business