அமைச்சர் காமராஜ் விரைவில் வீடு திரும்புவார், விஜயபாஸ்கர்

அமைச்சர் காமராஜ் விரைவில் வீடு திரும்புவார், விஜயபாஸ்கர்
X

கொரோனாவால் பாதிக்கப்பட்ட உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நலமுடன் உள்ளார், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என புதுக்கோட்டையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புதிய இருதய நோய் சிறப்பு சிகிச்சை பிரிவை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில்:-உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சிறந்த களப்பணியாளர், எதிர்பாராத விதமாக அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டது. தற்போது அவர் நலமுடன் உள்ளார். நாளை அல்லது நாளை மறுநாள் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார். நாளை தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு மருந்து ஒத்திகை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தமிழகத்திற்கு வருகை புரிந்து கொரோனா தடுப்பு மருந்து செலுத்துவதற்கான பூர்வாங்க பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!