ரஜினிகாந்த்தை சந்தித்து ஆதரவு கேட்பேன் : கமல்ஹாசன்

ரஜினிகாந்த்தை சந்தித்து ஆதரவு கேட்பேன் : கமல்ஹாசன்
X

சென்னை சென்றவுடன் என்னுடைய நண்பர் ரஜினிகாந்த்தை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரிப்பேன் எனக்கு ஆதரவு தருவதை பற்றியும் அவரிடம் பேசுவேன் என புதுக்கோட்டையில் மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமலஹாசன் பேட்டியின் போது கூறினார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற 2021 ஆம் ஆண்டு நடைபெறுவதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் நேற்று இரவு புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் இதன் பின்னர் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கடியாபட்டியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கிய அவர் இன்று காலை செய்தியாளர்களிடம் சந்தித்துப் பேசுகையில்:-

ரஜினிகாந்த் உடல் நிலை சார்ந்து அரசியலுக்கு வரவில்லை என்று முடிவெடுத்து இருந்தால் வரவேற்பேன், சென்னை சென்றவுடன் அவரை நேரில் சந்தித்து பேசுவேன். அவர் நலனை விரும்புவோர்களில் நானும் ஒருவன், நண்பன் என்ற முறையில் நான் அவரிடம் ஆதரவு கேட்பேன், தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க கூடாது என மக்களே விரும்புகின்றனர், சிறுமிகள் பாலியல் வன்கொடுமைகள் சம்பவத்தில் தனிப்பட்ட முறையில் திருந்த வேண்டும்,திராவிடம் என்பது இரு கட்சிகளுக்கு உரித்தானது இல்லை.

திராவிடம் என்பது அனைவருக்கும் பொதுவானது, திராவிடம் என்பது மொஹஞ்சதாரா காலம் தொட்டு உள்ளது நானும் திராவிடன் என்பதால் எனது அரசியலும் திராவிடம் தான்.பொங்கல் பரிசுத் தொகையாக 2500 ரூபாய் வழங்கப்படுவதற்கு அமைச்சர்களின் புகைப்படத்துடன் டோக்கன்கள் வழங்கப்படுவது ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை இதுவும் ஊழலின் தொடர்கதை தான் என்று தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!