திமுகவின் புகாருக்கு ஆளுநர் நடவடிக்கை தேவை : திருநாவுக்கரசர்

திமுகவின் புகாருக்கு ஆளுநர் நடவடிக்கை தேவை : திருநாவுக்கரசர்
X

திமுக அளித்த ஊழல் புகாருக்கு ஆளுநர் நடவடிக்கை தேவை என திருநாவுக்கரசர் புதுக்கோட்டையில் கூறினார்.

புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியின் 136வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் புதுக்கோட்டை காந்தி பூங்காவில் உள்ள காந்தியின் சிலைக்கு அக்கட்சியினருடன் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர் கூறும் போது,

இரட்டை சின்னத்தை முடக்க நினைக்கிறார்கள் என அமைச்சர் சிவி சண்முகம் பேசியது எடப்பாடி பழனிச்சாமி நினைத்தா ஓபிஎஸ்ஸை நினைத்தா அமித்ஷாவை நினைத்தா அல்லது மோடியை நினைத்தா என்பது தெரியவில்லை என்றார். மேலும் திருவள்ளுவருக்கு எந்த ஒரு சாயம் பூசக்கூடாது ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டவர், உலகத்திற்கு பொதுமறை தந்த தமிழ்தாத்தா அவர், இதுபோன்ற செயல் அநாகரீகமானது கண்டனத்துக்குரியது, நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் தேறி வர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். அவர் உடல் நலத்துடன் வந்த பிறகு அரசியல் கட்சி தொடங்குவது அல்லது தொடங்காதது குறித்து அவரே அறிவிக்கட்டும்,

ஜனநாயக நாட்டில் பேரணி, ஊர்வலம், ஆர்ப்பாட்டம் என மக்களை சந்திப்பதற்கு தடை விதிக்கின்றனர், அமைச்சர்கள் முதலமைச்சர் மட்டும் மக்களை சந்திக்கின்றனர் பேரணி செல்கின்றனர், அவர்களுக்கு யார் தடை போடுவது, சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணத்தை நிறுத்த முடியுமா, திமுகவின் கிராம சபைக் கூட்டத்திற்கு தடை விதிக்கும் தமிழக அரசு முடிந்தால் ஆட்சியையும் அதிகாரத்தையும் கையில் வைத்துக்கொண்டு அவர்களும் கிராம சபை கூட்டம் நடத்தி மக்களை சந்திக்க வேண்டியது தானே, அதிமுகவின் ஊழல் பட்டியலோடு திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுநருக்கு புகார் தெரிவித்துள்ளார் இந்த புகார் குறித்து ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்