4 மணி நேர சிகிச்சைக்கு பின் சிறுவன் தலையில் துப்பாக்கி குண்டு அகற்றம்

புதுக்கோட்டை மாவட்டம் அம்மாசத்திரம் பகுதியில், துப்பாக்கி சுடும் பயிற்சியின், தலையில் குண்டு பாய்ந்ததில் 11 வயது சிறுவன் புகழேந்தி படுகாயம் அடைந்தான். உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிறுவன் அனுமதிக்கப்பட்டார்.
இதனை அடுத்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மூளை நரம்பியல் மருத்துவக்குழுவினர் சிறுவனுக்கு தொடர்ந்து 4 மணிநேரம் அறுவை சிகிச்சை செய்து, தலையில் இருந்த குண்டு அகற்றினர். எனினும், சிறுவன் தொடர்ந்து 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சிறுவனின் தாய் கூறுகையில், நானும் மகனும் வீட்டில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, முதலில் வேகமாக என் தலை மீது ஏதோ சென்றது. அடுத்த நொடியே மீண்டும் சத்தம் வந்தது. அப்போது உடனே மகன், பேச்சு மூச்சு இல்லாமல் தரையில் விழுந்தான், என்வென்று பார்ப்பதுகுள் தலையில் இருந்து இரத்தம் கொட்டியது. எங்களால் என்ன என்றே யோசிக்க முடியவில்லை. எனது மகனை எப்பாடியாவது காப்பாற்றி கொடுங்கள் என கண்ணீருடன் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu