புதுச்சேரி பல்கலை தொலைதுார கல்வி சேர்க்கை: 31ம் தேதியுடன் முடிகிறது
புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் தொலைதுார கல்வி இயக்குனரக மாணவர் சேர்க்கை, வரும் 31ம் தேதியுடன் முடிகிறது. இதுகுறித்து புதுச்சேரி பல்கலைக்கழக உதவி பதிவாளர் மகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது : புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் தொலைதுார கல்வி இயக்குனரகத்தில் மொத்தம் 20 பட்டப் படிப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் எட்டு எம்.பி.ஏ., மேலாண்மை படிப்புகளும் உள்ளன. வழக்கமாக தொலைதுார கல்வி இயக்குனரகத்தில் மாணவர் சேர்க்கை ஜனவரியில் துவங்கும். கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்தாண்டு மாணவர் சேர்க்கை மார்ச் 1ம் தேதி துவங்கியது. மாணவர் சேர்க்கை வரும் 31ம் தேதியுடன் முடிகிறது. .மாணவர் சேர்க்கை குறித்த மேலும் தகவல்களுக்கு https://dde.pondiuni.edu.in என்ற இணைய முகவரியை காணவும். என்று அதில் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu