புதுச்சேரி - திருப்பதி பாசஞ்சர் ரயில் விரைவு ரயிலாக மாற்றம்
புதுச்சேரியில் இருந்து, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் வழியாக, திருப்பதி வரையில், டீசல் ரயில் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்கு காலத்தில், இச்சேவை ரத்து செய்யப்பட்டது.
நிறுத்தப்பட்ட ரயில் சேவையை, மீண்டும் துவக்க வேண்டும் என, ரயில் பயணியரின் கோரிக்கையை ஏற்ற ரயில்வே நிர்வாகம், ஏப்., 1 முதல் இருந்து மீண்டும் ரயில் சேவையை சில மாற்றங்களுடன் துவக்கியுள்ளது.
குறிப்பாக, புதுச்சேரி - திருப்பதி டீசல் ரயில் சேவையை, மின்சார ரயில் சேவையாக மாற்றி, விரைவு ரயிலாக இயக்குகிறது. விரைவு ரயிலாக இயக்கப்படுவதால், சிறிய ரயில் நிறுத்தங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளன.
மேலும், சாதாரண ரயில் கட்டணத்தைவிட, விரைவு ரயில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இது, சாதாரண ரயிலில் பயணம் செய்யும் கிராமப்புற மக்களுக்கு, கூடுதல் சுமையாக தெரிகிறது.
ரயில்வே துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், டீசல் ரயிலில் இருந்து, மின் விரைவு ரயிலாக மாறிய பின், அதற்குரிய மிக குறைந்த கட்டணமாக, 30 ரூபாயில் இருந்து துவங்குகிறது. அதற்கு ஏற்ப, சில ரயில் நிறுத்தங்களில் நிறுத்துவதை தவிர்த்து, விரைவாக செல்வதற்கு வசதி செய்து தரப்பட்டு உள்ளது. இது, விரைவாக செல்லும் ரயில் பயணியருக்கு சவுகரியமாக இருக்கும் என்று கூறினார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu