ரூ.400-ஐ தாண்டிய பூண்டு விலை: அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்
பூண்டு (கோப்பு படம்)
கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை சற்று குறைந்துள்ள நிலையில், பூண்டு வரத்து குறைந்து உள்ளதால் வரலாறு காணாத அளவுக்கு ஒரு கிலோ பூண்டு ரூ.450 வரை விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நமது அன்றாட சைவ, அசைவ சமையலில் பயன்படுத்தப்படும் விளைப்பொருள்களில் ஒன்று பூண்டு. இந்த பூண்டு மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் தேயிலை, இதற்கு அடுத்தபடியாக மலைத்தோட்ட காய்கறிகளான கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, பூண்டு, பீன்ஸ் உள்ளிட்ட மலைக் காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இங்கு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பிவைக்கப்படுகின்றன.
இதேபோல, கோத்தகிரி, மஞ்சூா், ஆடாசோலை, தேனோடு, கம்பை, அணிக்கொரை உள்பட பல்வேறு இடங்களில் மலைப் பூண்டு பயிரிடப்பட்டு உழவா் சந்தை உள்ளிட்ட பல்வேறு சந்தைகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
மாநிலத்தின் பெரும்பான்மையான தேவையை ஈடு செய்யும் வகையில் பிற மாநிலங்களில் இருந்தும் பூண்டு இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில், பூண்டு அறுவடைக் காலம் தொடங்கிவிட்ட நிலையிலும் வழக்கத்துக்கு மாறாக, சென்னை கோயம்பேடு சந்தைக்கு பூண்டு வரத்து குறைந்து உள்ளதால் ஜனவரி மாதத்தில் பூண்டின் விலை கிலோவுக்கு ரூ.420 முதல் ரூ.450 வரை அதிகரித்துள்ளதால் சில்லறை வியாபாரிகளும், இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனா். கடந்த 2 வாரங்களில் மட்டும் கிலோவுக்கு ரூ.150-250 வரை உயா்ந்து உள்ளது.
ஏற்கெனவே தக்காளி, வெங்காயம் விலை ஏற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தற்போது மலைப் பூண்டு விலை உயா்வால் பெரும் சுமை ஏற்பட்டுள்ளது.
வறட்சி, வெள்ளப்பெருக்கால் பூண்டு விளைச்சல் பாழானதே, விலை உயர்வுக்கு காரணம். புதிய விளைச்சல் வரும் பூண்டின் விலை ஏறுமுகமாகவே இருக்கும் என வியாபாரிகள் கூறியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu