அபராதம் கட்டாவிட்டால், வாகனங்கள் பறிமுதல்: போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை

அபராதம் கட்டாவிட்டால், வாகனங்கள் பறிமுதல்: போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை
X

கோப்புப்படம் 

போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் அபராத தொகை கட்டாவிட்டால், வாகனம் அல்லது அசையும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்து காவல்துறையினர் எச்சரிக்கை

சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களிடம் ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. கடந்த ஒரே மாதத்தில் போக்குவரத்து காவல்துறை எடுத்த கடும் நடவடிக்கை காரணமாக போதையில் வாகனம் ஓட்டிய நபர்களிடம் இருந்து ரூ.3.5 கோடி அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

போதை நபர்களுடன் வாகனங்களில் பயணிப்பவர்கள் போதையில் இருந்தால், அவர்களும் ரூ.10 ஆயிரம் அபராத தொகை கட்ட வேண்டும், என்பது தற்போது கடுமையான விதிமுறையாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் அபராத தொகை கட்டாதவர்களின் சம்பந்தப்பட்ட வாகனங்களோ அல்லது இதர வாகனங்களோ அல்லது அசையும் சொத்துக்களோ நீதிமன்றங்கள் வாயிலாக பறிமுதல் செய்யப்படும், என்று போக்குவரத்து காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு