பெண்களின் புகைப்படங்களை நிர்வாணமாக காட்டும் செயலி ரகசிய வெளியீடு - தடுக்க கோரிக்கை

பெண்களின் புகைப்படங்களை நிர்வாணமாக காட்டும் செயலி ரகசிய வெளியீடு - தடுக்க கோரிக்கை
X

பைல் படம்

ஆபாச படங்களை காட்டும் ஏராளமான செல்போன் செயலிகள் இணையதளத்தில் உலா வருகின்றன.

உலகில் விஞ்ஞானம் மற்றும் அறிவியல் தொழிநுட்ப வளர்ச்சி அபரிதமாகவும் அதேநேரம் அபாயகரமாகவும் உள்ளது. இதன் விளைவு ஒவ்வொரு மனிதனுடைய செயல்பாட்டையும் கண்ணுக்கு தெரியாமல் கண்காணிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

இந்நிலையில் செல்போன், இணையதள பயன்பாடுகள் மனிதர்களால் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. விஞ்ஞானம் எவ்வுளவு தான் வளர்ந்தாலும் பெண்கள் மீதான பார்வை மாறவில்லை. ஆபாச படங்களை காட்டும் ஏராளமான செல்போன் செயலிகள் இணையதளத்தில் உலா வருகின்றன.

இந்நிலையில், தற்போது வித்தியாசமான ஒரு செயலியை ரகசியமாக வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த செயலி பெண்களின் புகைப்படத்தை நிர்வாணமாக காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எந்த பெண்ணுடைய புகைப்படத்தை இந்த செயலிக்கு கொண்டு வந்தாலும் அது நிர்வாணமாக காட்டிவிடும். பெண்களை மட்டுமே காட்டும் வகையில் உருவாக்கி இருக்கிறார்கள். ஆண்கள் படத்தை எந்த மாற்றமும் செய்யாது.

இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பல லட்சம் பேர் பார்த்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த செயலி கடந்த ஆண்டே தொடங்கப்பட்டதாகவும், தற்போது தான் இந்த செயலி பிரபலமாகி இருக்கிறது. இதை யார் உருவாக்கினார்கள் என்பது தெரியவில்லை.

கடவுளுக்கு சமமாக பெண்மையை போற்றும் நம் நாட்டில், பெண்களை தாயாகவும், சகோதரியாகவும் மதிக்கின்றனர். இதுபோன்று பெண்களை அசிங்கப்படுத்தும் நோக்கில் உருவாக்கியுள்ள இணையதள செயலிகளை தடுத்து கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!