அரசுப்பணி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க செயலி அறிமுகப்படுத்தப்படும்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

அரசுப்பணி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க செயலி அறிமுகப்படுத்தப்படும்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
X

நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன்

டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அரசு பணி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க செயலி அறிமுகப்படுத்தப்படும்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தமிழக சட்டப்பேரவையில் இன்று நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அரசு பணி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க செயலி அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

அரசுப் பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வுகளை நடத்தி வருகின்றன. அரசுத் தேர்வு விண்ணப்பதாரர்கள் எளிதாக விண்ணப்ப பணிகளை மேற்கொள்வதற்காக புதிய வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ளது. டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளின் விண்ணப்பதாரர்களுக்கு ஒருங்கிணைந்த செயலி அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். TNPSC, TRB, TNUSRB உள்ளிட்ட அரசுப் பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வுகளின் விண்ணப்பதாரர்களுக்காக பிரத்யேக கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்படும்.

தேர்வு அறிவிப்பு, பாடத்திட்டங்கள், தேர்வு முடிவுகள் ஆகியவற்றை இந்த கைபேசி செயலி மூலம் அறிந்து கொள்ளலாம். மேலும், சான்றிதழ் சரிபார்ப்பையும் இந்த செயலி மூலமாகவே மேற்கொள்ளலாம். மாநில குடிமைப் பணி அலுவலர்களுக்கு ஆண்டுதோறும் இடைக்கால பயிற்சிகள் நடத்தப்படும் என்றும் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேரவையில் அறிவித்துள்ளார். மேலும், சென்னை திருமங்கலத்தில் இருந்து ஆவடிக்கு மெட்ரோ ரயில் இயக்குவது பற்றி சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!