பத்திரிகை தகவல் அலுவலக தென் மண்டல முதன்மை தலைமை இயக்குநர் ஓய்வு

பத்திரிகை தகவல் அலுவலக தென் மண்டல முதன்மை தலைமை இயக்குநர் ஓய்வு
X

வெங்கடேஸ்வர ராவுக்கு வாழ்த்து தெரிவித்த அதிகாரிகள்.

பத்திரிகை தகவல் அலுவலக தென் மண்டல முதன்மை தலைமை இயக்குநர் வெங்கடேஸ்வர் நேற்றுடன் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

பத்திரிகை தகவல் அலுவலக தென் மண்டல முதன்மை தலைமை இயக்குநர் வெங்கடேஸ்வர் நேற்றுடன் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். 1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாக்பூரில் பணியில் சேர்ந்த இவர், பின்னர் தில்லி, ஒடிசா, கொல்கத்தா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா ஆகிய இடங்களில் அகில இந்திய வானொலி, தூர்தர்ஷன், பத்திரிகை தகவல் அலுவலகம், கள விளம்பர அலுவலகம் ஆகியவற்றில் பணிபுரிந்தார்.

ஆந்திர பிரதேசத்தின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறையின் செயலாளராக அயல் பணி முறையில் நியமிக்கப்பட்ட திரு வெங்கடேஸ்வர் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் மத்திய அரசின் பணிக்கு திரும்பினார். இதைத் தொடர்ந்து பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர், தலைமை இயக்குநர் ஆகிய பொறுப்புகளை வகித்த இவர், தென் மண்டல முதன்மை தலைமை இயக்குநராக பணிபுரிந்து நேற்றுடன் ஓய்வு பெற்றார்.

சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தில் நடைபெற்ற பணி நிறைவு பாராட்டு விழாவில் கூடுதல் தலைமை இயக்குநர் எம். அண்ணாதுரை, தூர்தர்ஷன் இயக்குநர் குருபாபு பலராமன், மத்திய மக்கள் தொடர்பக இயக்குநர் காமராஜ், பத்திரிகை தகவல் அலுவலக இணை இயக்குநர் அருண்குமார் பழனி, அகில இந்திய வானொலியின் இணை இயக்குநர் லீலா மீனாட்சி, பத்திரிகை தகவல் அலுவலக துணை இயக்குநர் சஞ்சய் கோஷ், கள விளம்பர அலுவலர் எஸ். முரளி, தகவல் உதவி அலுவலர் ஸ்ரீவித்யா உள்ளிட்டோர் வெங்கடேஸ்வர ராவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தேசிய தகவலியல் மையத்தின் உயர்நிலை இயக்குநராக பணியாற்றி ஓய்வுப் பெற்ற அ.முகமது மைதீனுக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

பீகாரில் 35 ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்த இவர், பல்வேறு மாநிலங்களில் தகவல் தொழில்நுட்ப பிரிவுகளில் பணியாற்றி உள்ளார்.

Tags

Next Story
ai as the future