மனைவியை கவிதையால் புகழ்ந்து பாருங்கள்: அப்புறம் சிறக்கும் பலமான உறவு
kanavan manaivi kavithaiமனித வாழ்வில் கணவன்- மனைவி குடும்ப வாழ்க்கை என்பது அற்புதமான ஒரு உறவு ஆகும். அதனால் தான் இல்லறம் சிறந்தால் நல்லறம் சிறக்கும் என தனது ஈரடி குறளில் விளக்கி உள்ளார் உலக பொதுமறையை இயற்றிய திருவள்ளுவர். அது மட்டும் அல்ல கணவன் -மனைவி வாழ்க்கை பற்றி பத்துக்கும் மேற்பட்ட குறள்களையும் எழுதி உள்ளார்.
kanavan manaivi kavithaiமனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பது தமிழ் பழமொழி. நமக்கு மனைவியாக வர்றவங்க,நம்மளோட குடும்பத்தையும் அவங்க குடும்பமாக பார்த்துக் கொள்வது தான் கடவுள் நமக்கு கொடுக்கும்மிகச் சிறந்த பரிசு…!
kanavan manaivi kavithaiசொந்தங்கள் எல்லாம் சரியாக அமையாவிட்டாலும், வாழ்க்கை துணை எனும் சொந்தம் சரியாக அமைந்து விட்டால் போதும், அத்தனை உறவுகளையும் உலகையும் வென்று விடலாம். ஒரு பெண்ணின் மனக் காயத்திற்கு காரணம் அவள் கணவனாக இருந்தால், அந்த காயத்திற்கு சிறந்த மருந்தாக திகழ அந்த கணவனால் மட்டுமே முடியும்.
kanavan manaivi kavithaiஒவ்வொரு ஆணின் குறும்பை ரசிக்க ஒரு பெண்ணும், ஒவ்வொரு பெண்ணின் குழந்தை தனத்தை ரசிக்க ஆணும் வாழ்க்கையில் கிடைத்தால் வாழ்க்கை வரம் தான்..!
kanavan manaivi kavithaiஇவை எல்லாவற்றையும் தாண்டி மனைவியை கவிதைகளால் வர்ணித்து பாருங்கள். அப்புறம் பலமாக சிறக்கும் உறவு என்கிறார்கள் அனுபவித்து ரசித்தவர்கள். அவர்கள் இதற்காக படித்த கவிதைகள் என்ன என்பதை இனி பார்ப்போமா?
மனைவியை காதலியை போல
பார்த்து நேசியுங்கள்.. தங்கை போல
பாதுகாத்துக் கொள்ளுங்கள்..
தாயைப் போல மரியாதை
செலுத்துங்கள் உங்களைத்
தாண்டி அவள் அன்பு
எங்கும் செல்லாது.
வரையப்படாத ஓவியத்தின்
வண்ணங்களாய் சிதறிக் கிடந்தேன்
நான்..! அழகிய ஓவியமாக இன்று,
என் அன்பு மனைவியின்
வருகைக்கு பின்பு.
துக்கம், சோகம், கவலை, அழுகை
போன்ற வாக்கியங்களை அகராதியில்
இருந்து நீக்க வேண்டும்.. என்னை
மனதார தாங்கியவள் என் மனைவி..!
எனது முதல் குழந்தை அவள்..! அவளை
நான் என் மூச்சு உள்ள வரை
சுமக்க வேண்டும் என் மார்பில்.
நீயும் நானும் கணவன் மனைவியாக
வாழ இந்த காதல் குடுத்து
வைத்திருக்க வேண்டும்.
உன் மனம் முழுவதும் நான்
மட்டும் தான் இருக்க வேண்டும்
அது தான் என் ஆசை.
என் வாழ்க்கை முழுவதும்
நீ மட்டும் என் கூடவே இருக்கணும்
அது தான் என் தவம்..!
தன் மனைவியை அடிக்கடி
குறை கூறிக் கொண்டிருக்கும்
கணவனுக்கு தெரியாது தன்
முதுமையில் அவள் தான்
தாயாவாள் என்று..!
உடலுக்கு உயிர் எவ்வளவு
முக்கியமோ அது போல
தான் நீ எனக்கு.
ஒரு மனைவிக்கு தன் தாயைப்
போல தன்னை பார்த்துக் கொள்ளும்
ஒரு கணவன் கிடைத்து விட்டால்..
அவள் தான் உலகத்தின்
மிகப்பெரிய அதிஷ்டசாலி..!
என் கணவர் ரொம்ப
கோபக்காரர் தான் ஆனால்
அதை விட அதிகமா என் மீது
அன்பு வைத்திருக்கிறார்.
தோளுக்கு மேல் வளர்ந்த
பின்னும் என்னை தோளில்
போட்டு தாலாட்டி.. குழந்தை போல
பார்த்துக் கொள்ளும் உறவு
நீ மட்டும் தான் அன்பே..!
உரிமையை தந்து விட்டு
அன்பை வெளிப்படுத்த மாட்டான் கணவன்
ஆனால் சின்ன சின்ன விஷயங்களிலும்
அன்பை எதிர்பார்ப்பவள் மனைவி..!
ஒரு பெண்ணிற்கு இந்த உலகில்
எவ்வளவு சந்தோஷங்கள் கிடைத்தாலும்
அவள் தேடும் ஒரே சந்தோஷம் அவள்
கணவனின் அன்பு மட்டுமே..!
எனதருமை மனைவியே
நிலவில் தண்ணீர் உண்டு
உன் முகத்தில் வியர்வைத் துளிகள்.
நீ எதிரில் வரும் பொழுதெல்லாம்
என் எதிர்காலம் வருவதாய் உணர்கிறேன்.
உன்னைத் தவிர
மற்ற பெண்களை காணும் பொழுதெல்லாம்
பிரம்மன் கடமைக்கு
செய்திருப்பதை உணர்கிறேன்.
என் கண் இமைகள் கூட மூடி விடலாம்
ஆனால் என் இதய கதவு
என்றும் திறந்தே இருக்கும்
உன் வரவை எதிர்பார்த்து.
நான் உன்னை ஆயிரம் முறை பார்த்திருந்தாலும்
நீ என்னை பார்த்த அந்த நொடியில் தான்
விதையாய் விழுந்தது என் காதல்.
மறக்க நினைக்கிறேன்
உன்னை அல்ல
உன்னிடம் பேசாமல் விட்ட
அந்த நிமிடங்களை.
சற்று முன்
நீ சிரித்த போது தான்
சிதறி தொலைத்தேன்
நான் அதை தேடி எடுப்பதற்குள்
ஏன் மறுபடி சிரித்தாய்.
சுவாசிக்க காற்றே இல்லை என்றாலும்
நான் உயிர் வாழ்வேன்
நேசிக்க இருக்கும் வரை.
பிரியாத வரம் வேண்டும்
மண்ணை விட்டு அல்ல
உன் மனதை விட்டு.
என் மனதை அறிந்ததால் தான்
கவலையை கூட
உன்னிடம் மறைக்கிறேன்
கடல் அலைகள் போல்
உன் ஞாபகங்கள் என்னுடன்
வந்து செல்கிறது.
உன் அனுமதி இல்லாமல்
உன்னை தொடுவேன்
உன் கண்ணீரை துடைக்க மட்டும்.
நீ நெருப்பாக இருந்தாலும்
நேசிப்பேன்
நான் இறந்து சாம்பலாகும் வரை.
காதல் தேசத்து அகதி நான்
உந்தன் காதலன் என்று கைது செய்தாய்
சிறை எனக்கல்ல உனக்கு
என் இதயத்தில்.
பலமுறை விக்கல் எடுத்தும்
தண்ணீர் தேடவில்லை
நினைப்பது நீயாக இருந்தால்
நீளட்டும் சில நிமிடம் என்று.
நீ இமைக்கும் அழகைக் காண்பதற்காகவே
இமைக்காமல் கிடக்கின்றன
என் இமைகள்.
உலக அதிசயங்கள் எல்லாம்
கல்லால் ஆணவையடி
இல்லையேல் உன்னையும் சேர்த்து இருப்பார்கள்.
என் உயிர் போனாலும்
உன் பெயர் சொல்லி துடிக்கும்
என் இதயம்
தேவையான நேரத்தில் காட்டப்படாத அன்பு பின்பு
ஆயிரம் ஆண்டுகள்
தொடர்ந்து வந்தாலும் அர்த்தம் அற்றது.
அன்பை மட்டுமே கடன் கொடு
அது மட்டுமே அதிக வட்டியுடன்
உனக்கு திரும்ப கிடைக்கும்.
சுகங்களை பகிர்ந்து கொள்ளும் அன்பை விட
சோகங்களை பகிர்ந்து கொள்ளும் அன்பு
என்றும் உண்மையானது.
அப்புறம் என்ன இவ்வளவு கவிதைகள் போதாதா? இந்த கவிதைகளால் மனைவியரை ஒரு முறை புகழ்ந்து தான் பாருங்களேன்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu