/* */

பிரபாகரன் பிறந்த நாளில் இயக்குனர் கவுதமன் எழுதியுள்ள வாழ்த்து மடல்

பிரபாகரன் பிறந்த நாளில் இயக்குனர் கவுதமன் வாழ்த்து மடல் எழுதியுள்ளார்.

HIGHLIGHTS

பிரபாகரன் பிறந்த நாளில் இயக்குனர் கவுதமன் எழுதியுள்ள வாழ்த்து மடல்
X

இலங்கையில் நடைபெற்ற இறுதி போரில் கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற இறுதி போரில் விடுதலை புலிகள் இயக்கம் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக அந்நாட்டு அரசால் அறிவிக்கப்பட்டது. ஆயுத போராட்டத்தின் மூலம் 'தமிழீழம்' எனப்படும் தமிழர்களுக்கான தனி நாட்டை கட்டமைப்பதற்காக விடுதலைப்புலிகள் இயக்கத்தை தோற்று வித்து சிங்கள அரசை நடு நடுங்க வைத்தது மட்டும் அல்ல உலகின் பல நாடுகளின் ஆதரவையும் பெற்றிருந்த அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் போரில் கொல்லப்பட்டார், லட்சம் பேருக்கு மேல் கொத்து குண்டு போட்டு கொல்லப்பட்ட ஈழ தமிழர்களுடன் பிரபாகரன் குடும்பமும் அழிக்கப்பட்டு விட்டது என இலங்கை அரசு அப்போது அறிவித்தது.

ஆனால் தமிழீழத்திற்கு மட்டும் அல்ல உலகில் உள்ள ஒட்டுமொத்த தமிழினத்தின் தேசிய தலைவரான மேதகு பிரபாகரன் இன்னும் உயிருடன் தான் இருக்கிறார் என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள். பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? போரில் கொல்லப்பட்டாரா? என்ற கேள்விக்கான விடை அவருக்கு மட்டும் தான் தெரியும் என்பதே உண்மை.


ஆனால் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25ம் தேதி அவரது பிறந்த நாளை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் திரைப்பட இயக்குனரும், தமிழ் பேரரசு என்ற கட்சியின் பொதுச்செயலாளருமான கௌதமன் பிரபாகரன் பிறந்த நாளில் தாலாட்டு என்ற பெயரில் எழுதியுள்ள மடலில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஐம்பதாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட எம் தமிழினத்தின் வரலாற்று நாயகர்களாக நான் பார்ப்பதும் அகம் மகிழ்வதும் ஐந்தே ஐந்து நபர்களைத்தான்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எம் இனத்தை ஆண்ட கரிகாலன், எல்லாளன். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகத்தின் பாதி நாடுகளை கட்டியாண்ட எங்கள் ராஜராஜன், ராஜேந்திர சோழன். நாங்கள் வாழ்ந்த சமகாலத்தில் வீரத்தோடும் அறத்தோடும் ஆட்சி செய்த என் தாய்க்கும் தாய் மொழிக்கும் சமமான எனது தமிழீழ தேசியத் தலைவர் "மேதகு" பிரபாகரன்.

எம் நிலத்தையும் எமது இனத்தையும் திட்டமிட்டு சிதைத்த "ரத்த காட்டேரி" ராஜபக்சேவை அவரது குடி மக்களே ஓட ஓட அடித்து துரத்தி விட்டு வாழ்வுக்கும் அன்றாட உணவுக்கும் சிங்கள வீதிகளில் தறிகட்டு திரிந்து கொண்டிருந்த நிலையில் "இந்நேரம் பிரபாகரன் இருந்திருந்தால் நாங்கள் பட்டினி கிடந்திருக்க மாட்டோம்" என்று ஒரு சிங்கள இளைஞன் கூக்குரல் எழுப்பியது ஒன்றே எம் தலைவனுக்கு சூட்டிய ஒரு மாபெரும் மணிமகுடம்.

"எதிரியை கூட கொல்லக்கூடாது அவன் மனதை வெல்ல வேண்டும்" என்று போர்க்களத்தில் நின்ற எந்த மன்னனும் அல்லது எந்தவொரு தலைவனும் சொன்னதாக இதுவரை வரலாற்றுக் குறிப்பில் இல்லை. கொத்தோடும் பிஞ்சுகளோடும் எங்கள் தாய்மார்கள், சகோதரிகள், எங்கள் வீட்டு பச்சிளம் குழந்தைகள் மீது ரசாயன குண்டுகளையும் கொத்துக் குண்டுகளையும் வீசி ஈவு இரக்கமில்லாமல் கொன்று குவித்துக் கொண்டிருந்த நிலையில் கூட என் வீட்டு பெண்களும் எதிரியின் விட்டு பெண்களும் எங்கள் வீட்டு குழந்தைகளும் எதிரியின் குழந்தைகளும் வேறு வேறு அல்ல ஆகையினால் எதிரியோடு மட்டும் யுத்தம் செய்வோம் எல்லாவற்றுக்கும் காலம் ஒருநாள் பதில் சொல்லுமென்று சலனமின்றி சொல்லிவிட்டு இறுதிவரை உறுதியோடு போராடியவர் எங்கள் அண்ணன் மேதகு பிரபாகரன். அதனால்தான் சிங்கள தாய்மார்களில் சிலர் இன்றும் கூட வல்வெட்டிதுறைக்கே வந்து இது "மாவீரன்" பிறந்த மண் என தலைவர் வீட்டில் மண் எடுத்து செல்வதாக மனம் நெகிழும் நிகழ்வுகள் நடந்தேறிக் கொண்டிருக்கிறது.

இந்த உலகம் தோன்றிய காலத்திலிருந்து எங்கள் தலைவனைப் போல இதுவரை ஒருவன் பிறந்ததில்லை. இந்த உலகம் அழியும் காலத்தில் கூட எங்கள் அண்ணனை போன்று இன்னொருவன் பிறக்கப் போவதில்லை. தமிழினம் மட்டுமே கொண்டாடும் எங்கள் அண்ணன் பிரபாகரன் அவர்களை மனிதகுலமே கொண்டாடுகிற காலம் வெகு தூரத்தில் இல்லை.

எங்கள் அண்ணனே! மாவீரனே! உன் பிறந்தநாளில் அகம் மகிழ்ந்து வாழ்த்துகிறேன். மண்ணுள்ளவரை விண்ணுள்ளவரை உன் புகழ் நிலைக்கும். உனது அறம் தழைக்கும்.

இவ்வாறு அவர் அதில் எழுதி உள்ளார்.

Updated On: 25 Nov 2022 9:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  3. வீடியோ
    சினிமா படத்தில்ல இருக்கிறது எல்லாம் நல்லவா இருக்கு? ...
  4. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  5. பொன்னேரி
    ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில் நாளை நீட் தேர்வு
  7. ஈரோடு
    ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம், ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளை...
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  9. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  10. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...