கைத்தறி, விசைத்தறி உற்பத்தியாளர்களுக்கு மின் கட்டண சலுகை: செந்தில் பாலாஜி

கைத்தறி, விசைத்தறி உற்பத்தியாளர்களுக்கு மின் கட்டண சலுகை:  செந்தில் பாலாஜி
X

அமைச்சர் செந்தில் பாலாஜி. (பைல் படம்)

கைத்தறி, விசைத்தறி உற்பத்தியாளர்களுக்கு மின் கட்டண சலுகை மார்ச் 1 முதல் அமல்படுத்தப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

கரூரில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்ததாவது:

தமிழகத்தில் கைத்தறி, விசைத்தறி உற்பத்தியாளர்களுக்கு மின் கட்டண சலுகை மார்ச் 1 முதல் அமலாகிறது. விசைத்தறிக்கு 3 நிலையிலான மின் கட்டணம் ஒரே நிலையாக மாற்றப்படுகிறது. அதன்படி ஒரு யூனிட்டுக்கு 70 பைசா மட்டுமே உயர்த்தபபடுகிறது. 2021ம் ஆண்டு திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி 750 யூனிட்டிலிருந்து 1000 யூனிட்டாக இலவச மின்சாரம் உயர்த்தப்படுகிறது.

கைத்தறி நெசவுக்கு 200 யூனிட் இலவசம் என்பது 300 யூனிட்டாக உயர்த்தப்படுகிறது. அதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஒரு மாதத்துக்கு முன்பே அறிவிக்க வேண்டியது ஈரோடு இடைத்தேர்தலால் காரணமாக அரசாணை ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது முதலமைச்சர் பிறந்த நாளையொட்டி கைத்தறி, விசைத்தறி உற்பத்தியாளர்களுக்கு மின் கட்டண சலுகை மார்ச் 1ஆம் தேதி முன் தேதியிட்டு அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
குடல் ஆரோக்கியத்தை ஆரோக்கியமா வெச்சுக்கணுமா? அப்ப இத கண்டிப்பா பண்ணுங்க!| how to improve gut health in Tamil