தஞ்சை அருகே தேரில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் பலி

தஞ்சை அருகே தேரில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் பலி
X

மின்சார விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட  காவல் துறையினர். 

தஞ்சை அருகே, தேர்த்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கியதில் மூன்று சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.

தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் அப்பர் குருபூஜை 94 ஆம் ஆண்டு விழா நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது. விழாவில் இன்று அதிகாலை 2 மணியளவில், தேரினை அப்பகுதி மக்கள் வடம் பிடித்து இழுத்து வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு மேலே சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது தேர் உரசியதில், தேரின் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், மின்சாரம் தாக்கி 10,பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் 3 சிறுவர்கள் அடங்குவர். இதுதவிர, பத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் நான்கு பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

தேரினை எடுத்து இழுத்து வரும்போது அப்பகுதியில் தண்ணீர் இருந்ததாகவும், அதனால் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் தேரினை விட்டு தள்ளி நின்றதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டு உள்ளதாகவும், அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.மின் கசிவால் தேர் எரிந்து சேதமடைந்தது.

சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்பட பலரும் நேரில் சென்று விசாரித்து வருகின்றனர். தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 10 பேர் உயிரிழந்த சம்பவம், தமிழக அளவில் மிகுந்த பரபரப்பையும், பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!