வட சென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி மீண்டும் தொடக்கம்

வட சென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி மீண்டும் தொடக்கம்
X
கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து 210 மெகாவாட் மின் உற்பத்தி இன்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

வடசென்னை அனல்மின் நிலையத்தில் முதல் யூனிட்டில் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும், 2-வது யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600 வீதம் 1,200 மெகாவாட்டும் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்தநிலையில் முதல் யூனிட் முதல் அலகில் கொதிகலன் குழாயில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கசிவு ஏற்பட்டதால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. அதனை சீரமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து 210 மெகாவாட் மின் உற்பத்தி இன்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!