இந்தியாவில் முதல் முறையாக அறிமுகமாகும் முதுகலை தொல்லியல் துறை படிப்பு!! எங்கே தெரியுமா ?
பைல் படம்.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு முதல் முதுகலை தொல்லியல் துறை படிப்பு தொடங்கப்பட உள்ளது. அதற்கு தமிழக ஆளுநர் ஆர் என் ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சந்திரசேகர் கூறியதாவது:
வரும் காலகட்டங்களில் தொல்லியல் துறையில் சுமார் 14,000 வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை, என தொல்லியல் அகழ்வாய்வு களங்கள் உள்ள தென் மாவட்டங்களில் இந்த படிப்பு தொடங்குவது சரியாக இருக்கும். அத்துடன் குமரிக்கண்டம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில் இந்த பாடப்பிரிவு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்தாலி நாட்டு பல்கலைக்கழகம் தொல்லியல் துறை சார்ந்த படிப்புக்காக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த ஆர்வம் காட்டியுள்ளது. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு முதல் முதுகலை தொல்லியல் துறை படிப்பு தொடங்கப்பட உள்ளது. அதற்கு தமிழக ஆளுநர் ஆர் என் ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இந்தப் படிப்பில் 20 மாணவர்கள் மட்டும் சேர்க்கப்படுவார்கள். மேலும் இந்த கல்வியாண்டில் தமிழ்நாட்டில் வேறு எந்த பல்கலைக்கழகங்களிலும் இல்லாத அப்லைடு பிசிக்ஸ் என்ற முதுகலை பாட பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு துணை வேந்தர் சந்திரசேகர் கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu