5 நிமிடத்தில் அஞ்சலக 'டிஜிட்டல் சேமிப்பு கணக்கு' ரெடி.. எப்படி?

5 நிமிடத்தில் அஞ்சலக டிஜிட்டல் சேமிப்பு கணக்கு ரெடி.. எப்படி?
X
உங்களுடைய மொபைல் போனிலேயே 5 நிமிடத்தில் அஞ்சலக டிஜிட்டல் சேமிப்பு கணக்கை எப்படி துவங்குவது என்று பார்ப்போம்.

நாடுமுழுவதும் உள்ள கிராமப்புறங்களில் வங்கி சேவை என்பது மக்களுக்கு பெரும் சிரமமாகவே இருந்து வருகிறது. வங்கிகளில் பணம் செலுத்த பல கிலோமீட்டர் தூரம் பயணம் செய்யவேண்டிய சூழல் ஏற்படுகிறது.

சமீப காலங்களில் ஏராளமான தொழில்நுட்பங்கள் வந்தாலும், சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக மக்கள் வங்கிக்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. உதாரணமாக அரசு நலத்திட்ட உதவிகள் பயனாளர்களின் வங்கிக்கணக்கில் மட்டுமே செலுத்தப்படுவதால் பெரும்பாலும் கிராமத்தினர் வங்கிக்கணக்கை தொடங்க நகரத்தை தேடி செல்லவேண்டி நிலை உள்ளது.

இந்நிலையில், கிராமங்களில் உள்ள அஞ்சல் துறை மூலம் தற்போது 'டிஜிட்டல் சேமிப்பு கணக்கு' என்ற சேவையை துவங்கிய நடைமுறையில் உள்ளது.

இந்த சேவை வங்கிக்கணக்கைப்போன்றே மொபைல் செயலியுடன் ரீசார்ஜ், பில் பேமெண்ட், மற்ற வங்கி கணக்கிற்கு பணம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்து வருகிறது.

மேலும் அனைத்து கிராமங்களிலும் கிளைகள் உள்ளதால் மக்கள் எளிதில் அணுக முடியும். பணம் செலுத்த முடியும். இந்த சேவைகள் குறித்து பெரும்பாலோனோர் அறியாமலேயே உள்ளனர். உங்கள் கைகளில் ஒரு ஸ்மார்ட் போன் இருந்தால் போதும் டிஜிட்டல் சேமிப்பு கணக்கை நீங்கள் துவங்கி விடலாம்.

இதற்காக நீங்கள் உங்களது மொபைல் போனில் உள்ள 'Google Play Store'-க்குள் சென்று 'IPPB' என்ற செயலியை பதிவிறக்கம் செய்து Install செய்துகொள்ள வேண்டும்.


பின்னர் அந்த செயலியில் 'Open Your Account Now' என்பதை கிளிக் செய்து, உங்களுடைய ஆதார் எண், பிறந்த தேதி, பான் கார்டு, முகவரி ஆகிய விபரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்.


இதனைத்தொடர்ந்து உங்களுக்கான குறுஞ்செய்தி மொபைலுக்கு வந்து சேரும். அதில் உங்களுடைய கணக்கு எண் உள்ளிட்ட விபரங்களை தெரியபடுத்தும்.


அதன்பின் 'login' ஆப்சனுக்குள் செல்ல வேண்டும். அப்போது கணக்கு எண், கஸ்டமர் ஐடி, பிறந்த தேதி, மொபைல் எண் விபரங்களை உள்ளீடு செய்தால், 'MPIN' பகுதிக்கு செல்லும். அதில் உங்களுக்கான ரகசிய 4 இலக்க எண்ணை உள்ளீடு செய்துகொள்ள வேண்டும். இதனையடுத்து வரும் பக்கத்தில் உங்களுடைய பதிவு வெற்றிகரமாக முடிந்துவிட்டதை காணலாம்.

இப்போது உங்களுக்கான டிஜிட்டல் சேமிப்பு கணக்கு ரெடியாகிவிட்டது. இதில் வங்கிக்கணக்கை போன்றே அனைத்து விதமான சேவைகளையும் பெறலாம்.

இதுதவிர மொபைல் போன் இல்லாதவர்கள் தங்கள் கிராமத்திலுள்ள அஞ்சலகத்தின் மூலமாகவும் டிஜிட்டல் சேமிப்பு கணக்கு தொடங்க முடியும். அதற்காகவே அங்கு பிரத்யேக ஸ்மார்ட்போன் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் உங்களுக்கு கணக்கை துவங்கி, கியூஆர் கோடுடன் கூடிய அட்டை ஒன்று வழங்கப்படும். அதில் உங்கள் வங்கிக்கணக்கு எண், பெயர், ஐஎப்எஸ்சி கோடுடன் விபரங்கள் எழுதியிருக்கும். இதற்காக வங்கிக்கணக்கில் வரவு வைப்பதற்காக ரூ.100 பெறப்படும்.

மேலும் விபரங்களுக்கு https://www.ippbonline.com/ என்ற இணையதளத்திலும், அருகிலுள்ள அஞ்சலகத்திலும் சென்றும் தெரிந்துகொள்ளலாம்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!