/* */

ரத்தாகிறதா +1 பொதுத் தேர்வு?

நடப்பு கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது

HIGHLIGHTS

ரத்தாகிறதா +1 பொதுத் தேர்வு?
X

பைல் படம்

10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு இருந்தது. ஆனால் ஆண்டுதோறும் 11ஆம் வகுப்புக்கும் தற்போது பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. காரணம் சில தனியார் பள்ளிகளில் 11ஆம் வகுப்புகள் நடத்தாமலேயே 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார் படுத்துவதாகவும், இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாவதாகவும் சர்ச்சை எழுந்தது. இதனால் கடந்த அதிமுக ஆட்சியில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டு, அதன்படி நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு உள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து மூன்று பொதுத்தேர்வுகளை எழுதுவதால் மாணவர்கள் சோர்வு அடைவதாலும், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவு எதிரொலியாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக வெளியான தகவலால் ஆசிரியர்களும், மாணவர்களும் மிகுந்த குழப்பத்தில் இருந்தனர். ஆனால் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவலில் உண்மை இல்லை என பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. மேலும் தேர்வு ரத்து தொடர்பாக எந்த ஒரு ஆலோசனையும் அரசு மேற்கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளது.

Updated On: 10 Jun 2023 2:06 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்