பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? சிறப்பு பேருந்துகள் எங்கிருந்து இயக்கப்படுகிறது?
கோப்புப்படம்
தமிழகத்தில் வரும் 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ரயில்களின் டிக்கெட் விற்று தீர்ந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக போக்குவரத்து கழகம் சார்பில், பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 12, 13, 14 ஆகிய 3 நாட்களுக்கு 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கத்திற்காக சென்னையில் 6 இடங்களில் தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் தற்காலிக பேருந்து நிலையம் செல்ல 340 இணைப்பு பேருந்துகளை இயக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி எந்தெந்த நிறுத்தங்களில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்பதை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
கோயம்பேடு பேருந்து நிலையம் : திருச்சி, மதுரை, நெல்லை, சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு, விழுப்புரம் மற்றும் பெங்களூரு நகரங்களுக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. செங்கோட்டை, திருச்செந்தூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகை ஆகிய ஊர்களுக்கும், மயிலாடுதுறை, அரியலூர், ஜெயங்கொண்டம், கள்ளக்குறிச்சி மற்றும் உதகைக்கும் கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் .
மாதவரம் புதிய பேருந்து நிலையம் : பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் செங்குன்றம் வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள்.
சென்னை கே.கே.நகர் பேருந்து நிலையம் : கிழக்கு கடற்கரை சாலை வழியாக கடலூர், சிதம்பரம் மற்றும் புதுச்சேரி செல்லும் பேருந்துகள் .
தாம்பரம் மெப்ஸ் : திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் .
தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம் : திருவண்ணாமலை, வந்தவாசி, செஞ்சி, சேத்துப்பட்டு, போளூர் மற்றும் பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார் கோயில் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகளும் தாம்பரம் ரயில் நிலையம் அருகே இருந்து புறப்படும்.
பூவிருந்தவல்லி புறவழிச்சாலை பேருந்து நிறுத்தம் : வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு மற்றும் ஓசூர், கிருஷ்ணகிரி, தருமபுரி செல்லும் பேருந்துகளும், திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu