பொங்கல் பண்டிகையில் நம்ம ஊரு திருவிழா.. சென்னையில் கனிமொழி எம்.பி. நேரில் ஆய்வு...

பொங்கல் பண்டிகையில் நம்ம ஊரு திருவிழா.. சென்னையில் கனிமொழி எம்.பி. நேரில் ஆய்வு...
X

சென்னையில் நம்ம ஊரு திருவிழா நடத்துவது குறித்து கனிமொழி எம்.பி. ஆய்வு மேற்கொண்டார்.

பொங்கல் பண்டிகையின்போது சென்னையில் நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சி நடத்தப்பட உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை கனிமொழி எம்.பி. ஆய்வு செய்தார்.

நாட்டுப்புறக் கலைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையிலும், அவர்களின் கலைத் திறமைக்கு வாய்ப்பு அளிக்கும் வகையிலும் நம்ம ஊரு திருவிழா என்ற நிகழ்ச்சி நடத்தப்படும் என்று 2022- 2023 ஆம் நிதியாண்டில் சட்டமன்ற பேரவையின் மானியக் கோரிக்கையின்போது தெரிவிக்கப்பட்டது.


சென்னையிலும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் நடைபெறும் 'நம்ம ஊரு திருவிழா' நிகழ்ச்சியில் கலையில் ஆர்வம் கொண்டவர்களை கண்டறிந்து, அவர்களின் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு வங்கப்படுகிறது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்த 2006–2011 ஆட்சி காலத்தில், கனிமொழி முன்னெடுப்பில் 2007 ஆம் ஆண்டு பொங்கல் பண்டியின்போது சென்னையில் பல்வேறு இடங்களில் ஒருவார காலம் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் சென்னை சங்கம் விழா என்ற பெயரில் நடத்தப்பட்டது.

மேலும், தூத்துக்குடி வஉசி கல்லூரி மைதானத்தில் கடந்த ஜூலை மாதம் 4 நாட்களுக்கு நெய்தல் திருவிழாவை கனிமொழி எம்.பி. தலைமை தாங்கி நடத்தினார். சென்னை சங்கமம் மற்றும் நெய்தல் கலைத் திருவிழா நிகழ்ச்சிகளுக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

இதன் தொடர்ச்சியாக, சென்னையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் நிகழ்ச்சியை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, சென்னையில் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியை எங்கு நடத்துவது என்பது தொடர்பாக, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி இன்று சென்னையில் உள்ள சிவன் பூங்கா, நாகேஸ்வர ராவ் பூங்கா, செம்மொழி பூங்கா ஆகிய பகுதிகளில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தமிழக சுகாதாரத் துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி உடனிருந்தார்.

இதுதொடர்பாக, முதல்வருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு நம்ம ஊரு திருவிழா நடைபெரும் இடம் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்பும் கலைக்குழுக்கள் தங்கள் கலைத்திறமையை வெளிப்படுத்தும் வகையில் 5 நிமிட வீடியோவை குறுந்தகடு அல்லது பென்டிரைவில் பதிவு செய்து,மண்டல உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்