பொங்கல் பரிசு: முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை
முதலமைச்சர் ஸ்டாலின்
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின்போது ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டுகிறது. எப்போதும் பொங்கல் பரிசுத் தொகையாக ரொக்கப்பணம் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு திமுக ஆட்சியில் அரிசி, பருப்பு உள்ளிட்ட 21 மளிகைப் பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.
இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக அ.தி.மு.க குற்றம் சாட்டிய நிலையில், இந்த ஆண்டு மீண்டும் பணமாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து நாளை முதலமைச்சர் .ஸ்டாலின் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தை பொறுத்தவரை சட்டசபை கூட்டத்தொடர் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் வருகிற ஜனவரி மாதம் மீண்டும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. 2023ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் இந்த கூட்டத்தொடர் தொடங்க உள்ளது.
இந்தநிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசுத் தொகையாக ரூ. 1,000 வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான நடைமுறை குறித்து ஆலோசனை நடைபெற்று வரும் நிலையில், இது தொடர்பாக நாளை (திங்கட்கிழமை) முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் கூட்டத்த்தில் இது குறித்து அனைத்து அமைச்சர்களுடன் ஆலோசிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்கிறார். இந்தக் கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவை கூடும் தேதி, ஆளுநர் உரையில் இடம்பெறும் கருத்துகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu