தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் - அகவிலைப்படி உயர்வு

தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் - அகவிலைப்படி உயர்வு
X
தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்துள்ள தமிழக அரசு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியையும் உயர்த்தி அரசாணை பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக, தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. மேலும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ்சும் வழங்கப்படுகிறது.

சி, டி பிரிவு பணியாளர்களுக்கு ரூ. 3000 , ஓய்வூதியதாரர்களுக்கு ரூ. 500 போனஸ், சிறப்பு காலமுறை ஊதிய பணியாளர்களுக்கு ரூ. 1000 போனஸ் வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

அகவிலைப்படி உயர்வு மற்றும் பொங்கல் போனஸ் இரண்டிற்கும் ரூ.8894 கோடிய தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. தற்போது பொங்கல் போனஸ் வழங்குவதன் மூலம், அரசுக்கு ரூ.169.56 கோடி இழப்பு ஏற்படும்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!