திருத்தணி-சமூக வலைத்தளம் மூலமாக பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் கைது

திருத்தணி-சமூக வலைத்தளம் மூலமாக பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் கைது
X
திருத்தணி அருகே மாணவிக்கு சமூக வலைத்தளம் மூலமாக பாலியல் தொந்தரவு கொடுத்த இன்ஜினியரிங் முடித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்

திருத்தணி அருகே 2 மாணவிக்கு பேஸ்புக் சமூக வலைத்தளம் மூலமாக பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெண்ணின் தாய் எஸ்பியிடம் புகார்: திருத்தணி காவல்துறையினர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்த இளைஞரை கைது செய்து விசாரணை

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த ஆர்கே பேட்டை ஒன்றியம் அம்மையார் குப்பத்தை சேர்ந்த பிளஸ் டூ படிக்கும் மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த இளங்கோ என்பவர் ஃபேஸ்புக் மூலமாக அறிமுகமாகி பழகி வந்துள்ளார். இந்நிலையில் மாணவியின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்ததால் அதிர்ந்து போன பெற்றோர் பெண்ணிடம் தீவிரமாக விசாரித்துள்ளனர்.

அப்போது பேஸ்புக் மூலம் பழகிய இளங்கோ என்பவர் ஆபாசமாக பேசியும் அருவருக்கத்தக்க வகையிலும் செயல்பட்டதை தனது செல்போனில் பதிவாகி இருந்ததை தனது தாயிடம் காட்டியுள்ளார். தொடர்ந்து இது போன்ற மன உளைச்சலுக்கு ஆளாக்கியதால் மகள் பயந்துபோய் இருப்பதை அறிந்த தாய் உடனடியாக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் அவர்களிடம் கொடுத்த புகாரில் ஃபேஸ்புக் மூலம் தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில் திருத்தணி இன்ஸ்பெக்டர் சத்தியவாணி மற்றும் காவல்துறையினர் அம்மையார் குப்பத்தில் உள்ள இளங்கோவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ள இளங்கோ தற்போது ஆந்திராவில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்வது தெரியவந்தது. ப்ளஸ் டூ படிக்கும் மாணவியிடம் செல்போனில் பேஸ்புக் மூலம் பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!