பழனி இடும்பன் குளத்திற்கு சென்ற எச்.ராஜா அதிரடி கைது
காவல்துறையினரிடம் வா.ராஜாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக தலைவர்
திண்டுக்கல் மாவட்டத்தில் பழனியில் இந்து ஆலய பாதுகாப்பு குழுவின் சார்பாக பழனி இடும்பன் கோவில் குளக்கரையில் மகா சங்கமம் ஆரத்தி நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்திருக்கிறது. இந்த விழாவுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக பாஜகவின் மூத்த தலைவர் எச். ராஜா, மன்னார்குடி சென்டலங்கார ஜீயர் ஆகியோர் கலந்து கொள்ள இருந்தார்கள்.
இந்த நிலையில் இன்று மதியம் 3 மணிக்கு போலீசார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அழைத்து இந்த நிகழ்ச்சி நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் எழுத்து ஊர்வமாக தகவல் வரவில்லை என்று கூறியுள்ளனர். மேலும், நிகழ்ச்சி இரவு நேரம் நடப்பதால், மின்சார ஏற்பாடுகள் குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை, நிகழ்ச்சிக்கு பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் வருவார்கள் என்பதால் அதற்கான போதிய இட வசதியும் இல்லை. மேலும், பக்தர்கள் எத்தனை வாகனங்களில் வருவார்கள் என்ற தகவலும் தரவில்லை என்பதால், மகா சங்கமம் ஆரத்தி நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்துள்ளனர் .
அது மட்டுமல்லாமல் பழனி காவல் உட்கோட்டம் முழுவதும் காவல் சட்டப்பிரிவு அமலில் இருப்பதாக சொல்லி சட்டம் ஒழுங்கு பிரச்சனை, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்பதால் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனை கேள்விப்பட்ட எச். ராஜா போலீசாரின் தடை உத்தரவை மீறி இந்த நிகழ்ச்சியை தலைமை ஏற்று நடத்தப் போவதாக அறிவித்துவிட்டு சம்பவ இடம் நோக்கி செல்லவே, சத்திரப்பட்டியில் வைத்து திண்டுக்கல் சரக டி ஐ. ஜி. முருகேஷ் குமார் மீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் சுற்றி வளைத்து எச். ராஜாவை கைது செய்துள்ளனர்.
கைது நடவடிக்கையின்போது ஒத்துழைப்பு தராமல் எச். ராஜா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசனையும் மரியாதை குறைவாக பேசினார் என்று கூறப்படுகிறது. ஆனாலும் போலீசார் எச். ராஜாவை அதிரடியாக கைது செய்து அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu