பெரியார் பிறந்தநாள் - பாமக நிறுவனர் ராமதாஸ் மரியாதை

பெரியார் பிறந்தநாள் - பாமக நிறுவனர் ராமதாஸ் மரியாதை
X
Periyar Birthday -பெரியாரின் 144 பிறந்தநாளையொட்டி பாமக நிறுவனர் ராமதாஸ் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Periyar Birthday -தந்தை பெரியாரின் 144ஆவது பிறந்த நாளை ஒட்டி தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின் போது ஜிகே மணி மற்றும் பாமக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அறியாமை இருளை அகற்ற வந்த தந்தைப் பெரியாரின் 144-ஆவது பிறந்தநாளில் அவரை வணங்குவோம்... போற்றுவோம். பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியாரின் கொள்கைகள் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடியவை. அவை தான் நமக்கு வழிகாட்டும் விளக்குகள். அவற்றின் வழியில் நாம் பயணிப்போம்! என்று பதிவிட்டுள்ளார்.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!