சென்னை விமான நிலைய புதிய முனையம்: திறப்பு விழா பிரதமர் மோடி பங்கேற்பு

சென்னை விமான நிலைய புதிய முனையம்: திறப்பு விழா பிரதமர் மோடி பங்கேற்பு
X

சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, 

சென்னை விமான நிலையத்தில், சர்வதேச தரத்தில் கட்டப்பட்டுள்ள, புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வந்தடைந்தார். ஐதராபாத்தில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார். இந்த பயணத்தின் போது 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

சென்னை வந்தடைந்த பிரதமர் மோடியை முதலமைச்சர் .ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அமைச்சர்கள், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ஜீகே வாசன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு புத்தகம் ஒன்றை பரிசாக அளித்தார். ‘தமிழ்நாட்டில் காந்தியின் பயணம்’ என்ற புத்தகத்தை பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பரிசாக அளித்தார்.

முதலமைச்சர் ஸ்டாலினுடன் சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார். இரண்டாவது முனையமாக அமைந்திருக்கும் இந்த கட்டடம் ரூ.1,260 கோடி மதிப்பில் 1,36,295 சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ளது. இந்த முனையம் மூலம், பயணிகளை கையாளும் திறன் ஆண்டுக்கு 2.3 கோடியில் இருந்து 3 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முனையத்தில் தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில், புகைப்படங்கள், ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. இங்கு வந்த மோடி, முனையத்தில் உள்ள வசதிகள், பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் உள்ளிட்டவை குறித்த புகைப்படங்களை பார்வையிட்டார். அப்போது, அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

சென்னை விமான நிலையத்தில் 2 ஆயிரத்து 467 கோடி ரூபாய் 2.36 லட்சம் சதுர மீட்டரில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியின் போது பிரதமர் மோடியுடன், முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, விமானப்போக்குவரத்துத்துறை மந்திரி ஜோதிராதித்ய சின்ஹா, மத்திய இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாட்பர் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி அடையாறு ஐஎன்எஸ் கடற்படைத்தளம் சென்றடைந்தார்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!