திண்டுக்கல்லில் 6.40 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்து உலக சாதனை

திண்டுக்கல்லில் 6.40 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்து உலக சாதனை
X

திண்டுக்கல் உலக சாதனை நிகழ்வில் மரக்கன்று நட்டு வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

திண்டுக்கல்லில் 6.40 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்து உலக சாதனை நிகழ்த்தப்பட்டது.

திண்டுக்கல்லில் 6.40 இலட்சம் மரக்கன்றுகள் நடவு செய்து உலக சாதனை நிகழ்த்தப்பட்டது.

இந்த நிகழ்வை எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி மற்றும் தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய 4 உலக சாதனை நிறுவனங்கள் உலக சாதனையாக அங்கீகரித்து அதற்கான சான்றிதழ்களை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோரிடம் வழங்கி பாராட்டினர்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், இடையக்கோட்டை ஊராட்சியில் நேற்று(23.12.2022) இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட 117 ஏக்கர் நிலப்பரப்பில் 4 மணி நேரத்தில் 6.40 இலட்சம் மரக்கன்றுகள் நடவு செய்து, உலக சாதனை நிகழ்வு நிகழ்த்தப்பட்டது.

இந்த உலக சாதனை நிகழ்வு, எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் (USA), ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்தியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உள்ளிட்ட உலக சாதனை நிறுவனங்களால், உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு, உலக சாதனைக்கான சான்றிதழ் வழங்கும் விழா இடையக்கோட்டையில் நேற்று (23.12.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் விசாகன் தலைமையில் நடைபெற்றது.

எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் (USA), ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்தியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உள்ளிட்ட உலக சாதனை நிறுவனங்களால், உலக சாதனைக்கான சான்றிதழை,இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோரிடம் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் தலைமைச் செயலர் (இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டுத்துறை) அதுல்யாமிஸ்ரா, நில நிர்வாக ஆணையர் மற்றும் அரசு சிறப்புச் செயலர் .எஸ்.நாகராஜன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் கார்த்திகேயன், கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் திட்ட இயக்குநர், பசுமை தமிழ்நாடு திட்டம் தீபக் ஸ்ரீவத்சவா, திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், வேடசந்துார் சட்டமன்ற உறுப்பினர் ச.காந்திராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த மாபெரும் உலக சாதனையை எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி ரபி பால்பாக்கி, அம்பாஸிடர் மற்றும் சீனியர் அட்ஜுடிகேட்டர் (Ambassador, Senior Adjudicator) ஜவஹர் கார்த்திகேயன், சீனியர் அட்ஜுடிகேட்டர் (Senior Adjudicator) அமீத் கே.ஹிங்க்ரோனி, அட்ஜுடிகேட்டர் (Adjudicator) நௌரா, ஆய்வுப் பயிற்சி அதிகாரிகள் (Trainee-RMT) பாவனா ராஜேஷ் மற்றும் ஜி.கே.சௌஜன்யா, அர்ச்சனா ராஜேஷ், மற்றும் ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி உலக சாதனை நிறுவனத்தின் அம்பாஸிடர் மற்றும் சீனியர் அட்ஜுடிகேட்டர் (Ambassador, Senior Adjudicator) முனைவர் செந்தில்குமார் மற்றும் (Adjudicator) அட்ஜுடிகேட்டர் எம்.சாந்தாராம், இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி உலக சாதனை நிறுவனத்தின் சீனியர் ரெக்கார்ட்ஸ் மேனேஜர் (Senior Records Manager) ஜெகநாதன் மற்றும் ரெக்கார்ட்ஸ் மேனேஜர் (Records Manager) எஸ்.யஷ்வந்த் சாய் மற்றும் தமிழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை நிறுவனத்தின் மூத்தப்பதிவு மேலாளர் (Senior Records Manager) பாலசுப்ரமணியன், ஆய்வுப் பயிற்சி அதிகாரி (Trainee) திருமூர்த்தி ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்து உலக சாதனையை அங்கீகரித்துள்ளனர்.

Tags

Next Story
கர்ப்பிணிகள் சத்து மாத்திரை சாப்பிடுவதால் பக்க விளைவுகள் ஏற்படுமா..? அத எப்டி தடுக்கலானு பாக்கலாமா?