பெண்கள் இலவச பயண செய்ய பிங்க் நிற பேருந்துகள் இன்று அறிமுகம்

பெண்கள் இலவச பயண செய்ய பிங்க் நிற பேருந்துகள் இன்று அறிமுகம்
X

சென்னையில் இன்று தமிழக அரசின் சார்பில் துவக்கப்படும் பிங்க் கலருடைய மகளில் இலவச பஸ்

இலவச பயண பேருந்துகளை எளிதில் அடையாளம் காண பிங்க் நிற பேருந்துகளை இன்று அறிமுகம் செய்கின்றனர்.

தமிழகத்தில் சாதாரண கட்டணம் உள்ள அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. சென்னையில் வெள்ளை நிற போர்டு கொண்ட பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. எனினும் அவசரத்தில் சில பெண்கள் இலவச பயணத்திற்காக டீலக்ஸ், சொகுசு பேருந்துகளில் ஏறி விடுகின்றனர்.

இந்த குழப்பத்தை தீர்க்கவும், இலவச பயணத்திற்கான பேருந்துகளை அடையாளம் காணவும் பிங்க் நிற பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய அலுவலகம் அருகே போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் பிங்க் பேருந்துகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.

சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் இந்த பேருந்துகளை தொடங்கி வைக்கிறார். மேலும் ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனை மெட்ரோ ரெயில் நிலைய வளாகத்தில் இருந்து பிற மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு 5 இணைப்பு மினி பேருந்துகள் இயக்கத்தையும் அவர் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.

Tags

Next Story
ai in future agriculture