சென்னை பாஜக தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - ஒருவர் கைது

சென்னை பாஜக தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - ஒருவர் கைது
X

பாஜக அலுவலகம்

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் மீது நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், நள்ளிரவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை தி.நகர் பகுதியில், தமிழக பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயம் உள்ளது. இங்கு, நேற்று நள்ளிரவில் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், 3 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

அலுவலக நுழைவாயில் பகுதியில் கதவு சாத்தப்பட்டு இருந்ததால் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தில் யாருக்கும், காவல் பணியில் இருந்த போலீசார் உள்ளிட்ட யாருக்கும் பாதிப்பில்லை. சம்பவ இடத்தில் துணை ஆணையர் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவ பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சம்பவம் தொடர்பாக, சென்னை நந்தனத்தை சேர்ந்த வினோத் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். முதல்கட்ட விசாரணையில், நீட் தேர்வுக்கு பாஜக ஆதரவு தெரிவிப்பதால், பெட்ரோல் குண்டு வீசியதாக, கைதானவர் கூறியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!