ஓய்வுபெறும் ஆசிரியர்களை மறுநியமனம் செய்ய தமிழக அரசு அனுமதி
கல்வியாண்டு பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டு முடியும் வரை பணி நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி ஓய்வு பெறுகின்றனர். இந்த நிலையில் மாணவர்களின் நலன் கருதி கல்வித்துறை ஓய்வுபெறும் ஆசிரியர்கள் நிபந்தனையின் பேரில் மறுநியமனம் செய்ய அனுமதி அளித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பில், வயது முதிர்வு காரணமாக அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டில் கடைசி வேலை நாள் வரை ( Upto the end of Academic Session ) தேவைப்படும் ஆசிரியர்களுக்கு மறுநியமனம் ஆணை வெளியிடப்படுகிறது.
மறுநியமனம் செய்ய ஆசிரியர்களின் பண்பு, நடத்தை திருப்திகரமாக இருக்க வேண்டும் என அரசு நிபந்தனை விதித்துள்ளது. மேலும் தொடர்ந்து பணிபுரியும் வகையில் ஆசிரியர்கள் உடற்தகுதி பெற்றிருக்க வேண்டும் எனவும் நிபந்தனையில் அரசு தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu