/* */

கட்டுமான பணி நிறைவு பெறாமலே மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு வழங்க அனுமதி

கட்டுமானப் பணி நிறைவு சான்றிதழ் இல்லாமலேயே மின் இணைப்பு, குடிநீர் குழாய் இணைப்பு, வசதிகளை வழங்கலாம் என நகராட்சி நிர்வாகத்துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

HIGHLIGHTS

கட்டுமான பணி நிறைவு பெறாமலே மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு வழங்க அனுமதி
X

பைல் படம்.

கட்டுமானப் பணி நிறைவு சான்றிதழ் இல்லாமலேயே மின் இணைப்பு, குடிநீர் குழாய் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வசதிகளை வழங்கலாம் என தமிழக நகராட்சி நிர்வாகத்துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் கட்டுமானப்பணிகள் முடிந்த பிறகு தான் மின் இணைப்பு, குடிநீர் குழாய் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு ஆகிய வசதி பெற முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது இதற்கு தீர்வளிக்கும் வகையில் தமிழக அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக நகராட்சி நிர்வாக ஆணையர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த மற்றும் கட்டட விதிகள் 2019, விதி எண் 20-ன் படி கட்டடங்களுக்கு கட்டுமான நிறைவு சான்று இன்றி மின் இணைப்பு வசதி, குடிநீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு வசதி உள்ளிட்டவற்றை வழங்கலாம் என அனைத்து மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மின்சார வாரியமும் புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

கட்டட சான்று பெற்ற பிறகே, மின் இணைப்பு , குடிநீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு ஆகியவற்றை வழங்குவதால், கட்டடம் கட்டும் பணியாளர்களும், உரிமையாளர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாக எழுந்த தொடர் புகாரை தொடர்ந்து இந்த நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் எடுத்துள்ளது. இந்த புதிய நடவடிக்கையால், இனி எந்த வித சிரமமும் இன்றி கட்டட முடிவு சான்றிதழ் பெறுவதற்கு முன்பாகவே மின் இணைப்பு வசதி, குடிநீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு வசதி ஆகியவற்றை பெறலாம்.

மேலும் இதனுடன் சில கட்டுப்பாடுகளையும் நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, 12 மீட்டர் உயரம் வரை உள்ள 3 குடியிருப்புகள் அல்லது 750 சதுர மீட்டர் (8,070 சதுர அடி) பரப்பளவிற்கு உட்பட்ட அனைத்து வீடுகளுக்கும், இது போன்று அனைத்து தொழிற்சாலைகளுக்கும் இந்த வசதியை வழங்கலாம் எனவும், இதற்கான உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும் நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவிட்டுள்ளது.

Updated On: 17 Feb 2023 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்