ஜல்லிக்கட்டு மைதானத்தில் பிற விளையாட்டுகளுக்கும் அனுமதி: அமைச்சர் வேலு
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் அமைய உள்ள உலகத்தரம் வாய்ந்த நவீன ஜல்லிக்கட்டு அரங்கில், தேவைப்பட்டால் மற்ற விளையாட்டுகளுக்கும் அனுமதி அளிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்து உள்ளார்.
அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரை கிராமத்தில், உலகத்தரம் வாய்ந்த நவீன ஜல்லிக்கட்டு மைதானம் அமைய உள்ளது. அந்த இடத்தை அமைச்சர் எ.வ.வேலு, ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஆய்விற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில், ஜல்லிக்கட்டு போட்டிக்காக இந்த அரங்கம் கட்டப்பட்டாலும், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறாத காலங்களில் மற்ற விளையாட்டுப் போட்டிகளையும் இங்கு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் மாடுபிடி வீரர்களுக்காக உள்ள அரங்குகளைவிட உயரிய தரத்தில், இந்த அரங்கம் அமைக்கப்பட உள்ளது. இந்த அரங்கம், இன்னும் ஓராண்டில் கட்டி முடிக்கப்பட திட்டமிட்டு உள்ளது.
இந்த அரங்கத்தை சிறப்பாக வடிவமைப்பதற்கு தனியார் கட்டடக்கலை நிபுணர்களின் ஆலோசனைகளை கோரப்பட்டுள்ளது என தெரிவித்தார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu