பெரம்பலூர் அருகே செல்லியம்பாளையத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

பெரம்பலூர் அருகே செல்லியம்பாளையத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
X

தற்கொலை செய்து கொண்ட  லோகேஸ்வரி.

பெரம்பலூர் அருகே செல்லியம்பாளையத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பற்றி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

பெரம்பலூர் அடுத்துள்ள செல்லியம்பாளையம் கிராமத்தில் வடக்குத் தெரு பகுதியில் வசித்து வருபவர் விவசாயி பொன்னுசாமி (வயது 50 ).இவரது மனைவி,காமாட்சி( 38,). இவர்களுக்கு லோகேஸ்வரி( 18 )தனலட்சுமி( 14,) காவியா( 13,) ஆகிய மூன்று மகள்கள் இருந்துள்ளனர். விவசாய கூலி வேலை செய்து கொண்டு குடும்பம் நடத்தி வரும் இவர்கள், மூத்த மகள் லோகேஸ்வரி பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு கடந்த ஒரு வருடமாக வீட்டில் இருந்து வருகிறார். இரண்டாவது மகள் தனலட்சுமி, இளைய மகள் காவியா ஆகிய இருவரும் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் மூவரும் வீட்டிலேயே இருந்துள்ளனர். இதில் மூத்த மகள் லோகேஸ்வரி கடந்த மூன்று மாத காலமாக அம்மை நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்ததாகவும் சரிவர சாப்பிட முடியாததால் அவரது அம்மா தொடர்ந்து திட்டி வந்ததாகவும் தெரிய வருகிறது, இதனால் மன உளைச்சல் அடைந்த லோகேஸ்வரி நேற்று வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அக்கம்பக்கத்தில் அவரைத் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் அவரது தாய் அவர்களது வயலுக்கு சென்று பார்க்கலாம் என்று சென்ற போது அங்கே உள்ள அவர்களது மாட்டுக் கொட்டகையில் லோகேஸ்வரி, துப்பட்டாவால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்தது.

தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தவரை பக்கத்து காட்டுக்காரர்கள் உதவியுடன் கீழே இறக்கி தனது வீட்டிற்கு கொண்டு வந்து சேர்த்து, இது குறித்து பெரம்பலூர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர் தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு பார்வையிட்டு லோகேஸ்வரியின் உடலை மீட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு பொது தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து லோகேஸ்வரி இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்