உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தில் குழந்தைகளுக்கு பரிசு வழங்கிய நீதிபதி

உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தில் குழந்தைகளுக்கு பரிசு வழங்கிய நீதிபதி
X
மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் குழந்தைகளுக்கு நீதிபதி பரிசு வழங்கினார்.
பெரம்பலூரில் நடந்த உலக மாற்றுத் திறனாளிகள் தின விழாவில் குழந்தைகளுக்கு நீதிபதி பரிசு வழங்கினார்.

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரில் சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் பள்ளிக் கல்வி துறையின் மாற்றுத்திறனாளிகளுக்கான உள்ளடக்கிய கல்வி திட்டத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி லதா தலைமை வகித்தார். வழக்கறிஞர் கவியரசு , மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் ஆறுமுகம் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும் மேற்பார்வையாளர் (பொ) ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள் , பகல் நேர பாதுகாப்பு மைய ஆசிரியர்கள்,உதவியாளர்கள் மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடத்தில் செயலாளர் சார்பு நீதிபதி மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உரிமைகள் அவர்களுடைய பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் உள்ள சட்டங்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். மாற்றுத்திறனாளி குழந்தைகளை அனைத்து நிலைகளிலும் பாதுகாக்கும் வகையிலும் குறிப்பாக பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாத்திடும் வகையில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் அவர்களை உன்னிப்பாக பாதுகாத்திட தங்களை தயார்படுத்திட வேண்டும் எனவும் அதற்கான அனைத்து சட்ட உதவிகளையும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தொடர்ந்து செய்து வருகிறது என்பதையும் தெரிவித்தார். நிகழ்வில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும் சிறப்பு ஆசிரியர் பயிற்றுனர்களுக்கும் பரிசுகள் வழங்கினார் .

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு