பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம்
X
பெரம்பலூர் மாவட்ட காவல் துறை சார்பில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது.
By - T.Vasantha Kumar, Reporter |8 March 2022 9:14 PM IST
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று சர்வதேச மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் உத்தரவின் படி திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவணசுந்தர் ஆலோசனை படி பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி மேற்பார்வையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்நிலையம் மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் மகளிருக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தியும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கியும், இறுதியில் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.மேலும் மாவட்டத்தில் பணிபுரியும் பெண் காவலர் ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்று நட்டு வைத்தார்கள்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu