பெரம்பலூரில் பஸ்சில் ஏற முயன்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

பெரம்பலூரில் பஸ்சில் ஏற முயன்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
X
பெரம்பலூர் பஸ் நிலையத்தில் பஸ்சில் ஏற முயன்ற பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலி பறித்து சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் இன்று மாலை குரும்பலூர் காமராஜர் தெருவை சேர்ந்த முத்துசாமி மனைவி சந்திரா (47),என்பவர் பெருமத்தூர் கிராமத்தில் உள்ள தனது உறவினரின் துக்க காரியத்திற்கு செல்ல வேண்டி பெருமத்தூர் செல்லும் நகர பேருந்தில் ஏறினார்.

அப்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினை மர்ம நபர் பறித்துச் சென்றான். இதுகுறித்து சந்திரா கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் நகர காவல் போலீசார் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரம்பலூரில் அடிக்கடி இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.காவல்துறையினர் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai marketing future