குன்னம் அருகே புது வேட்டக்குடியில் பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

குன்னம் அருகே புது வேட்டக்குடியில் பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
X

குன்னம் அருகே மர்ம நபர் பெண்ணிடம் நகை பறித்து சென்ற வீடு.

குன்னம் அருகே புது வேட்டக்குடியில் பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறித்த நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள புதுவேட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி வெண்ணிலா(26). நேற்று இரவு அவர்களது வீட்டின் திண்ணையில் படுத்து உறங்கியுள்ளார்.

நள்ளிரவு நேரத்தில் முகத்தை துணியால் மூடிய 4 மர்ம நபர்கள் வெண்ணிலாவின் கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். வெண்ணிலா சத்தம் போடவே அவரது கணவர் செல்வராஜ் எழுந்து ஓடி, விரட்டி சென்றார்.

மர்ம நபர்கள் தாக்கியதில் செல்வராஜுக்கு கையில் காயம் ஏற்பட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து குன்னம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!