பேரறிஞர் அண்ணாவின் 53-வது நினைவு தினத்தில் மாலை அணிவித்து மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 53-வது நினைவு தினத்தில் மாலை அணிவித்து மரியாதை
X

பெரம்பலூர் மாவட்ட கழகச்செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

திமுக சார்பில் வேப்பந்தட்டையில் அமைதி ஊர்வலம் சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பேரறிஞர் அண்ணா அவர்களின 53 வது நினைவு தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட கழகச்செயலாளர் குன்னம் இராஜேந்திரன் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் பிராகரன் முன்னிலையில், வேப்பந்தட்டையில் அமைதி ஊர்வலம் சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநில நிர்வாகிகள் துரைசாமி, டாக்டர் வல்லபன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ராஜேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார், பொதுக்குழு உறுப்பினர் ஜெகதீஸ்வரன், மாவட்ட துணைசெயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், மாவட்ட பொருளாளர் இரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் நல்லதம்பி, ஜெகதீசன், ஒன்றிய பெருந்தலைவர் ராமலிங்கம், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் முத்தரசன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட பிரதிநிதி அழகுவேல், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
எடுத்தவுடனே 3 லட்சம் சம்பளம்! 28 வயசு, டிகிரி இருந்தா போதும்..! எஸ்பிஐ வேலை இதோ!