பெரம்பலூர்:வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்

பெரம்பலூர்:வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்
X

பெரம்பலூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா வெளியிட்டார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா வெளியிட்டார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா வெளியிட்டார்.

அதன்படி பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் தற்பொழுது 322 வாக்குச்சாவடிகள், குன்னம் சட்டமன்றத் தொகுதியில் 320 வாக்குச் சாவடிகளும் என மொத்தமாக 652 வாக்குச்சாவடிகள் உள்ளன.

இதில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 332 வாக்குச்சாவடிகளில் மொத்தம் 3,00,795 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1,46,299 ஆண் வாக்காளர்கள், 1,54,474 பெண் வாக்காளர்களும் 22 இதர வாக்காளர்கள் உள்ளனர்.

அதே போல குன்னம் சட்டமன்ற தொகுதியில் 320 வாக்குச்சாவடிகளில் மொத்தம் 2,71,820 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1,34,035ஆண் வாக்காளர்கள் 1,37,772 பெண் வாக்காளர்களும் 13 இதர வாக்காளர்கள் உள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 2 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 5,72,615 வாக்காளர்களும் உள்ளனர். இதில் 2,80,334 ஆண் வாக்காளர்கள் 2,92,246 பெண் வாக்காளர்களும் 35 இதர வாக்காளர்கள் உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், வி.சி.க, தே.மு.தி.க, பா.ஜ.க உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்கள் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!