விபத்தில் காயமடைந்த ஆட்டோ ஓட்டுனருக்கு விஜய் மக்கள் இயக்கம் உதவி

விபத்தில் காயமடைந்த ஆட்டோ ஓட்டுனருக்கு விஜய் மக்கள் இயக்கம் உதவி
X

சாலை விபத்தில் காயம் அடைந்த ஆட்டோ ஓட்டுனருக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உதவி வழங்கப்பட்டது.

பெரம்பலூர் அருகே சாலை விபத்தில் காயமடைந்த ஆட்டோ ஓட்டுனருக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உதவி வழங்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம் செஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த பூபதி என்ற ஓட்டுநருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு விபத்தில் வலது கால் எலும்பு முறிவு ஏற்பட்டு ஓட்டுநர் பணிக்கு செல்ல முடியாமல் வீட்டில் இருந்துள்ளார்.

அதே பகுதியைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்கத்தின் ஒன்றிய தலைமை இணை செயலாளர் காளிதாசன் என்பவரின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல பெரம்பலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் சிவா தலைமையிலான குழு சென்றிருந்த போது காளிதாசன் தனது பிறந்த நாளை கொண்டாடுவதை விட எங்கள் பகுதியில் உள்ள கால் எலும்பு முறிவு ஏற்பட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு உதவலாம் என்று கூறியுள்ளார்.

அவரின் கோரிக்கையை ஏற்ற மாவட்ட தலைவர் சிவா தலைமையில் ஒன்றிய தலைவர் வினோத், துணை செயலாளர் சின்னதுரை, ஒன்றிய இணையதள அணி யோகேஸ்வரன் செஞ்சேரி கிளை மன்ற தலைவர் ராஜேஷ் மற்றும் கிளை நிர்வாகிகள் இணைந்து ஆட்டோ ஓட்டுநர் பூபதி இல்லத்திற்கு சென்று அவருக்கு அரிசி, மளிகை சாமான் உள்ளிட்ட பொருட்கள் வழங்கினர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!