செங்குணம் ஊராட்சி ஒன்றியத்தில் கால்நடைகளுக்கு சிறப்பு முகாம்

செங்குணம் ஊராட்சி ஒன்றியத்தில் கால்நடைகளுக்கு சிறப்பு முகாம்
X

மருத்துவமுகாமில் கால்நடைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  

செங்குணம் ஊராட்சி ஒன்றியத்தில் கால்நடைகளுக்கு சிறப்பு முகாம் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே கால்நடை மருத்துவ சிறப்பு முகாம் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா கண்ணுசாமி முன்னிலையில் நடைப்பெற்றது.

பெரம்பலூர் கால்நடை உதவி மருத்துவர்கள் பெரியசாமி, முத்தமிழ்செல்வன், கோகுல், கால்நடை ஆய்வாளர் தீபா, கால்நடை பராமரிப்பு உதவியாளர் வெங்கடாசலம், கல்நடை உதவியாளர் ரஞ்சித், ஓட்டுநர் ரவி ஆகியோர்கள் பங்கேற்று ஆடு, மாடுகளுக்கு சத்து ஊசி செலுத்தியும், மாத்திரை மருந்து வழங்கியும் சிகிச்சை அளித்தனர். இம்முகாமில் கவுன்சிலர் கலையரசன், துணை தலைவர் மணிவேல், செங்குணம் ரகு மற்றும் குமார் அய்யாவு உள்ளிட்ட கால்நடை வளர்ப்போர் பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai as a future of cyber security