வேப்பந்தட்டை அரசு கல்லூரியில் ரூ.2.70 கோடியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம்

வேப்பந்தட்டை அரசு கல்லூரியில் ரூ.2.70 கோடியில்  கூடுதல் வகுப்பறை கட்டிடம்
X

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அரசு கல்லூரியில் திறக்கப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடத்தில் பிரபாகரன் எம்.எல்.ஏ. குத்துவிளக்கேற்றினார்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அரசு கல்லூரியில் ரூ.2.70 கோடியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ. 2 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார். அப்போது பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் தழுதாழை.பாஸ்கர் வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் வீ.ஜெகதீசன், மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். நல்லதம்பி, ஒன்றிய பெருந்தலைவர் க.ராமலிங்கம், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், துணை பெருந்தலைவர் எம்.ரெங்கராஜ்,மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர் எஸ்.அழகுவேல், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் இரா.சிவக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி கலியமூர்த்தி, ஒன்றிய குழு உறுப்பினர் செல்லம் அழகுவேல், கிளைக் கழக செயலாளர்கள் நடராஜ், செல்வராஜ் மற்றும் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!